இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் நடுரோட்டில் விளையாட்டாக வாகனத்தை வளைந்து வளைந்து ஓட்டியுள்ளார். அப்போது எதிரே வந்த பிக்கப் வாகனம் மீது மோதியதால் மோட்டார் சைக்கிளுடன் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது உடல்நலம் பற்றிய கூடுதல் தகவல் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஒரு காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Chikodi, Karnataka
#driveresponsibly pic.twitter.com/GjRVnjhiGs
— Prateek Singh (@Prateek34381357) October 27, 2025
