தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் முத்ராஜ் பள்ளி கிராமத்தில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி மதியம் 12:00 மணி அளவில் அகுலா ஸ்ரீநிவாஸ் என்பவருடைய வீட்டில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. அப்போது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் அமர்ந்திருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. திடீரென்று வெடித்த எரிவாயு சிலிண்டர் சுவர்கள், கூரை மற்றும் அமைப்புகளில் கடுமையான அதிர்வை ஏற்படுத்தியது. நொடி பொழுதில் மேல் தள சுவர்கள் இடிந்து விழும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
குடும்பத்தினர் வீட்டின் முன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் உள்ளே சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. பயங்கர சத்ததுடன் சிலிண்டர் வெடித்து சிதறிய நிலையில் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த வீடுகளும் பாதிக்கப்படவில்லை. வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…