அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே செல்கிறார்கள். தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பாடயே காணோம். படத்தின் துவக்கத்தின் முதலே பல பிரச்சினைகளை சந்தித்தது விடாமுயற்சி திரைப்படம்.

இந்த திரைப்படத்தை அசர்பைசானிலில் எடுப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் மழை, பனி, குளிர் என்று பல காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு பல லட்சம் ரூபாய் வரை செலவானது. இது ஒரு பக்கம் இருக்க த்ரிஷாவின் கால்சீட் கிடைக்காமல் நடிகர்கள் பலரும் அசர்பைசானில் சும்மாவே தங்கி இருந்த சூழலும் ஏற்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க பெரிய பெரிய திரைப்படங்களை லைக்கா நிறுவனம் கமிட் செய்த காரணத்தால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. பல நாட்கள் படப்பிடிப்பு நடக்கவே இல்லை. இதனால் கோபமடைந்த அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்தில் நடிப்பதற்கு காமிட்டானார். குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது.
ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது. இதுவும் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் அசர்பைசான் சென்றிருந்த நிலையில் நடிகர் அஜித்தின் மனைவிக்கு ஆப்ரேஷன் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பினார் அஜித். தற்போது வரை சென்னையில் தான் இருந்து வருகின்றார்.

பொதுவாக அஜித்தின் திரைப்படங்கள் அனைத்துமே ஸ்டுடியோவில் தான் எடுக்கப்படும். அப்போதுதான் ரசிகர்கள் தொல்லை இல்லாமல் படபிடிப்பு நடக்கும் என்று எண்ணுவார் அஜித். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தான் துணிவு திரைப்படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் மீதி படப்பிடிப்பும் அங்குதான் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அசர்பைசானுக்கு பெரிய கும்பிட போட்டு பட குழுவினர் ஹைதராபாத்திற்கு நடையை கட்டி இருக்கிறார்கள். விரைவில் இப்படம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
