பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக களம் இறங்கிய ஜோவிகாவிற்கும், விசித்திராவுக்கும் இடையே படிப்பு குறித்து மோதல் நிலவியது. இந்நிலையில் படிப்பு என்பது அவசியமா இல்லையா என்பது குறித்து ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே சண்டை வந்தது. படிப்பு எனக்கு வரல நான் கஷ்டப்பட்டேன் அதனால நிப்பாட்டிட்டேன் என ஜோவிகா கூறியுள்ளார். அதற்கு விசித்ரா அடிப்படை கல்வி என்பது மிகவும் அவசியம்.
என்னோட பசங்களும் சுமாரா படிக்கிறவங்க தான். அதுக்கப்புறம் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எதையும் நான் தவறாக சொல்லவில்லை. நமது பெற்றோர் தேவையான கல்வியை கொடுக்க தயாராக இருக்கும்போது படிக்காவிட்டால் எப்படி என்ற நல்ல எண்ணத்தில் தான் பேசினேன் என விசித்திரா கூறினார். அதற்கு ஜோவிகா கல்வி மற்றும் பொது அறிவு முக்கியம் தான். நீட் பிரச்சனையால் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
படிப்பு என்கிற விஷயத்தில் தற்கொலை, தவறான பாதையில் போறாங்க. அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இங்கு வந்தேன் என பேசினார். இருவருக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் விசித்ரா பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தொகுப்பாளர் விசித்திரா மகன்களிடம் உங்களுக்கு தமிழ் பேச தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு விசித்திரா எனது மகன்கள் பிறந்தது பூனேவில். அங்கு ஹிந்தியும், மராட்டியும் தான் பேசுவார்கள். பள்ளிகளிலும் ஹிந்தி அல்லது மராட்டி தான் கற்றுக் கொடுப்பார்கள். இதனால் சிறு வயதில் இருந்து எனது மகன்களை ஹிந்தி பேசுவதற்கு பழகினேன் எனக் கூறுகிறார். அனைவர் முன்னிலையிலும் ஜோதவிகாவிடம் உனக்கு தமிழில் எழுத தெரியுமா? என கேள்வி எழுப்பிய விசித்ராவின் மகன்களுக்கே தமிழ் தெரியவில்லையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…