லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா இணைந்து நடித்த படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது.
இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்பாகவே லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தை விட அதிகமாக இருக்குமா? லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யுமா என ரசிகர்களிடையே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒருநாள் நானும் லலித் சாரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது லலித் சார் லோகேஷ் எப்படியாவது நம்ம லியோ படம் நல்ல வசூல் செய்யணும்; பாத்துக்கோங்க; நிறைய மீம்ஸ் எல்லாம் போடுறாங்க பார்தீங்களா அப்படின்னு கேட்டார். அதற்கு நான் ஆமா சார். நானும் பார்த்தேன்; இன்னொன்னு எனக்கு நீங்க ஹெலிகாப்டர் கொடுக்கிறதாவும் மீம் போட்டு இருந்தாங்க. அதை பார்த்தீர்களான்னு சொல்லி கிண்டலா கேட்டேன் என லோகேஷ் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…