Categories: சினிமா

ஒரு படம் ஓட்டுனதுக்கே இம்புட்டு அலப்பறையா..? அடுத்த சிம்புனு பேரு வாங்கப்போகும் பிக் பாஸ் கவின்..

Spread the love

கடந்தாண்டு 2023 ஆம் ஆண்டு கணேஷ் கே. பாபு அவர்கள் இயக்கத்தில் கவின், அபர்ணா நடிப்பில் வெளிவந்து, மாபெரும் சாதனையை படைத்த படம் தான் “டாடா”. கவினுக்கு இப்பட வெற்றிக்குப் பின் தான் திரை உலகில் மாபெரும் இடத்தை தந்தது. சத்ரியன், நட்புனா என்ன தெரியுமா போன்ற படங்கள் நடித்திருந்தாலும், தனக்கென்று அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த கவின்.

பிக் பாஸில் கலந்து கொண்டு, அதன் பின்னதாக லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் தானும் ஒரு சிறந்த நடிகர் என்று வெளிக்கொண்டு வந்துள்ளார். கவினுக்கு சமீப காலமாக எந்த படமும் சரியாக திரையில் ஓடாமல் இருந்த நிலையில், கணேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியான டாடா படத்தில் மாபெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இப்படத்தில் கவின் உடன் அபர்ணா, பாக்கியராஜ் வி.டி.வி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து படத்தை ஓடுவதற்கு ஒரு உந்துகோளாக இருந்தார்கள்.

தற்போது பட வெற்றிக்குப் பின் கவினுக்கு பல படங்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறது, சுந்தர் சி, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் கவினை நடிக்க வைப்பதற்காக கால்ஷீட் கேட்டு பலரும் வரிசையில் நிற்கிறார்கள். கிட்டத்தட்ட கவினுக்கு அடுத்தடுத்து ஏழு படங்கள் இருக்கிறது, ஆனால் டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இனிவரும் படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இவர் கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு ஏழு கோடிக்கு மேல் சம்பளமாக எதிர்பார்க்கிறாராம்.

அதனாலேயே வெற்றிமாறன் துணையை இயக்குனர் இயக்கத்தில் வெளியாக உள்ள படமும், சுந்தர் சி யின் கலகலப்பு 3 படத்திலும், அதிக சம்பளம் கவின் கேட்டுள்ளதால், தற்போது இப்படம் டிராப் ஆகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஒரு சில படங்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை கிடைத்ததை வைத்து கவின் இவ்வளவு சம்பளம் கேட்பது சரி வராது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கவின், தான் வெற்றி நாயகன் என்று மனதில் மிதப்பை வைத்துக்கொண்டு, சிம்பு மேல் வைத்த குற்றச்சாட்டு போல இவரும் நடித்துவரும் தற்போதைய படங்களின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வருகிறார் என்று இயக்குனர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுபோல் இவர் மேல் வைக்கும் பல குற்றச்சாட்டுகள் தகவலாக கசிந்து கொண்டே இருக்கிறது, இப்படியே இவர் செய்து கொண்டிருந்தால் சினிமா வாழ்க்கையில் தனக்கென்று வைத்திருக்கும் இடத்தை இழந்து சினிமாவை விட்டு காணாமல் போயிடுவார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

2 minutes ago

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

4 minutes ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

5 minutes ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

9 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

16 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

20 minutes ago