அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி தரப்பினர் டெல்லி தலைமையை நாடியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இதே நிலை நீடித்தால் வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவிற்கு எந்தவித லாபமும் இருக்காது என்று அவர்கள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, அதிமுகவை ஒருமுகப்படுத்த பாஜக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.
முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தியாளர்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்க ஈபிஎஸ் விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க அவர் தீவிரமாக இருப்பதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம். வேறு நிர்வாகிகள் மூலமாக சமரசம் பேச முயன்றபோதும், “கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கட்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாலும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியானதால், இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தற்போதைக்கு அமைதி காத்து வருகின்றனர். இந்தச் சூழலை சாதகமாக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் தனது ஆதரவாளர்களைப் பொறுப்புக்குக் கொண்டு வரும் வேலைகளையும், ஆலோசனைக் கூட்டங்களையும் தீவிரப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிருப்தி தரப்பு, தமிழக பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தங்களது குமுறல்களைக் கொட்டி, அதிமுகவின் தற்போதைய சூழல் குறித்து விவாதித்துள்ளது.
தமிழகத்தில் தவெக திடீரென ஆட்சி அமைத்துள்ள அரசியல் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரத்தில் கொஞ்சம் பொறுமையாகக் காய்களை நகர்த்த எண்ணியுள்ளார். மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால் அவரால் உடனடியாகத் தமிழக அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை. நாடாளுமன்றத் தொடர் முடிந்த பிறகு அமித்ஷா இதில் இறுதி முடிவு எடுப்பார் என்பதால், அதுவரை அமைதி காக்க அதிருப்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வரும் வேலுமணியின் திட்டத்தையும் அமித்ஷா உன்னிப்பாகக் கேட்டுள்ளதாகத் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…