தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழ்நாடு அரசுக்குக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது மாநிலத்தின் பல இடங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது . கடும் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலைகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு தொடர்ந்து மின்மிகை மாநிலம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் மின்தடைக்கு உற்பத்தி குறைவா, நிர்வாகத் தோல்வியா அல்லது பராமரிப்புப் பணிகளா காரணம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் . மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகள் இருளில் மூழ்கியிருக்கும் வேளையில், பெரும் தொழில் வளாகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தடையின்றி வெளிச்சத்தில் இயங்குவது மக்கள் மத்தியில் “இது மின்வெட்டா அல்லது மின்திருட்டா?” என்ற பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகத் திருப்பிவிடப்படுகிறதா என்ற உண்மையைப் பொறுப்பானவர்கள் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்த மின்வெட்டு விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று தவாக சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட வாரியாக மின்சார உற்பத்தி, தேவை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும் விநியோகம் குறித்த முழுமையான விவரங்களை அரசு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார். முன்அறிவிப்பின்றி செய்யப்படும் மின்வெட்டுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகள், சிறு தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…
தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள்…