“தொட விடமாட்டேன்… தொட்டா விடமாட்டேன்-னு சொன்னீங்களே விஜய்?”…சொந்தக் கட்சியிலேயே இப்படியா?… அலுவலகத்திலேயே நடந்த ரகசிய டீல்… டிடிவி தினகரன் பகீர் அட்டாக்…!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீராசாமி என்பவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாம்பாக்கம் ஊராட்சியில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீன், தனது பணிக்கான ரசீதுகளுக்கு ஒப்புதல் பெற வீராசாமியை அணுகியுள்ளார். அப்போது, ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க வீராசாமி லஞ்சம் கேட்டதாகவும், இறுதியாகப் பேசப்பட்ட தொகையான 1.30 லட்சம் ரூபாயை ஊராட்சி மன்றத் தலைவரின் அலுவலகத்திலேயே வைத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, தவெக தலைவர் ஜோசப் விஜய்யை நோக்கி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன்” என்று திரைப்பட வசனங்கள் பேசும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது மற்றும் எப்படி ஒழிக்கப் போகிறார் என்று சாடியுள்ளார். மேலும், ஏற்கனவே திமுகவில் இருந்து ஊழல் புகார்களுக்காக விலகி, தற்போது தவெகவில் இணைந்து ‘வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட’ வீராசாமியின் இந்தச் செயல், அவர் மீதான முந்தைய குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் கருத்தையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நில முறைகேடு புகார் எழுந்த நிலையில், தற்போது தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி இருப்பது அக்கட்சியின் “ஊழல் ஒழிப்பு” கொள்கையின் லட்சணத்தைக் காட்டுவதாக தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ காட்சிகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் வீராசாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை வெறும் பேச்சோடு நிறுத்தாமல் செயல் அளவில் முதலமைச்சர் விஜய் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Visaka

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago