நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், நாடக, திரைப்பட நடிகை என்கிற பன்முகத் திறனோடு வலம் வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன். அதோடு மட்டுமில்லாமல் வீணை வாசித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து வீணை மீரா கிருஷ்ணன் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

வளையோசை கலகலகலவென’, ’இளையநிலா பொழிகிறதே’, ‘மேரே சப்னோ கி’, ‘பூவே செம்பூவே’, ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை இவர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வீணையால் மீட்டி பதிவு செய்து வருகிறார்.

இதற்காக அவர் veena meerakrishna என்ற யூ-டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘அம்மா, அப்பா விடாமல் கற்றுக்கொடுத்தது தான் வீணை என்றும், பிறந்த வீடு மட்டுமல்லாமல் , புகுந்த வீடும் இசைப் பின்னணி குடும்பம் என்றும், ஐயப்ப பக்தி பாடகர் கே.வீரமணியின் மருமகள் தான் என்றும் கூறியிருந்தார்.

இவர் தற்பொழுது கல்யாண கச்சேரி, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மட்டும் வாசிப்பதில் கவனம் செலுத்தி கிவருவதாகவும், கிளாஸிகல் பக்கம் போகவில்லை என்றும் கூறியிருந்தார். தற்பொழுது இவர் அதோ மேக ஊர்வலம் என்ற இளையராஜாவின் இன்னிசையை வீணையில் வாசிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய, அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
