தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியை வளமாக வைத்துக் கொண்டு இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களிடம் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஆனால் கூடுதல் தொகுதிகளை கேட்கும் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுகவிடம் சண்டை போட்டு கூடுதல் சீட் கேட்போமே தவிர கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். மக்கள் ஆதரவு விஜய்க்கு இருப்பதால் திமுக கூட்டணி தோற்றுவிடும் என பலர் சொல்வதாக குறிப்பிட்டவர் தோற்றுவிடுவோம் என்பதற்காக மானத்தை விட்டு விட்டு தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியில் இணைய முடியுமா என்று கேட்டுள்ளார். மேலும் ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9:30 மணிக்கு மிக உற்சாகமாகத் தொடங்கியது. மக்கள் தீர்ப்பின்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று…
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited), தற்போது 2026-ஆம்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி…