“செருப்பு வாங்கக்கூட வழியில்லை”…. விசிக ஜோதிமணியின் நிஜ சொத்து மதிப்பு இத்தனை லட்சமா?… அம்பலமான ’85 லட்சம்’ ரகசியம்….!

Spread the love

காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் (ஜோதிமணி), சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கிட வேண்டும் என்று வைத்த கோரிக்கையும், அதைத் தொடர்ந்து வெளியான அவரது விளக்கமும் தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தான் செருப்பு வாங்கக்கூட வழியில்லாத எளிய பின்னணியில் இருந்து வந்ததாகவும், சட்டப்பேரவைக்கு வாடகை வண்டியிலேயே பயணிப்பதாகவும் கூறிய அவர், தொகுதிப் பணிகளைச் செவ்வனே செய்ய வாகன வசதியும் உதவியாளருக்கான ஊதியமும் செய்து தர வேண்டும் என மன்றாடினார். இவரது கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ.க்களுக்குக் கார், டிரைவர் மற்றும் படி உள்ளிட்ட சலுகைகளை முதலமைச்சர் அறிவித்த நிலையில், ஜோதிமணியின் இந்த கோரிக்கை பெரும் கவனிப்பைப் பெற்றது.

தன்னிடம் ஏற்கனவே கார் இருந்தும் ஏன் புதிய கார் கோரினேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ள ஜோதிமணி, “என்னிடம் இருந்த காரை வாங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அது பயன்பாட்டில் இல்லை; அதை நான் விற்கவும் இல்லை. எனக்குப் புதிய லோன் போட்டு கார் வாங்க ஆசைதான், ஆனால் எனக்கு 70 வயதாகிவிட்டதால் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. அதனால்தான் அரசு சார்பில் கார் கேட்டேன்” என்று கூறியுள்ளார். இருப்பினும், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த உள்ளூர் அரசியல் கட்சியினரோ, அவர் குறிப்பிட்ட அந்தப் பழைய காரை அண்மையிலேயே விற்றுவிட்டதாகக் கூறி, அவரது கூற்றுக்கு முரண்பாடான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இந்த விளக்கங்களை விட, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களே தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. “செருப்பு வாங்கக்கூட வசதியில்லை” என்று சட்டமன்றத்தில் உருக்கமாகப் பேசியவருக்கு, லட்சக்கணக்கில் சொத்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவின்படி, ரூ. 9 லட்சம் மதிப்பிலான ‘டொயோட்டா எட்டியோஸ்’ (Toyota Etios) கார் ஒன்று அவரிடம் உள்ளது. மேலும், அசையும் சொத்தாக ரூ. 35 லட்சமும், அசையா சொத்தாக ரூ. 50 லட்சமும் என மொத்தம் ரூ. 85 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக இருக்கின்றன.

இதுமட்டுமன்றி, தனது மனைவியின் பெயரில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாக அவரே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், சொந்த காரும், மனைவியின் பெயரில் கால் கிலோவுக்கு மேல் நகைகளும் வைத்துள்ள ஒரு மக்கள் பிரதிநிதி, சட்டமன்றத்தில் தமக்கு எதுவுமே இல்லை என்று பேசியது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எளிமையைக் காரணம் காட்டி அரசு சலுகையைக் கோரிய எம்.எல்.ஏ-வின் நிஜமான சொத்து மதிப்பு வெளியானது, அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago