தமிழகத்தில் புதிய தவெக அரசு அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முக்கிய தூணாக விளங்கி வரும் சூழலில், அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆளும் அரசுக்குத் தனது பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார். மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தவெக தனது வசம் ஈர்க்க முயற்சிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும், இத்தகைய குதிரை பேர நடவடிக்கைகளை விசிக ஒருபோதும் ஏற்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய புதிய அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயலும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராகத் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பலவீனத்தைப் போக்கிக்கொள்ள அதிமுகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, அவர்களைத் தவெகவில் இணைக்கும் ரகசிய உத்திகள் அரங்கேறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் உட்பட 6 முக்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் இத்தகைய செயல்களைத் தங்களின் கட்சி தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும் எனத் திருமாவளவன் பேசியிருப்பது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…