தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெள்ளை அறிக்கை மற்றும் அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பதில், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும், பிறக்கும் குழந்தைகளே அதிக கடனுடன் பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தவெக தனது வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “இது குறித்து ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான் பதில் சொல்ல வேண்டும்; இதில் கருத்து சொல்ல எனக்கு எதுவும் இல்லை” என்று தடாலடியாகக் கூறி, பந்தை திமுகவின் பக்கமே திருப்பியுள்ளார்.
அதேபோல், தவெகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், அக்கட்சிக்கு இன்னும் விமர்சனக் காலம் கனிந்துவிடவில்லை என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சி குறித்து விமர்சிக்க இன்னும் 6 மாத காலம் பொறுத்திருக்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில், ஒரே மாதத்தில் தவெகவின் அரசியல் நகர்வுகள் பற்றி எந்தவொரு இறுதி மதிப்பீட்டையும் வழங்க இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது தவெகவினர் அரசியலைக் கற்றுக்கொள்கிற காலத்தில்தான் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தவெகவின் வெள்ளை அறிக்கைக்கு திமுகதான் முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போதைய அரசியல் கூட்டணிகளுக்கு இடையே உள்ள உறவுச் சிக்கல்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. விசிக தற்போது திமுக கூட்டணியில் இல்லை என்றாலும், தவெக கூட்டணியிலும் முழுமையாக இணையவில்லை என்பதும், “எப்போது வேண்டுமானாலும் தவெகவிடமிருந்து வெளியேறுவோம்” என்று திருமாவளவன் முன்பு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் விசிகவிற்குள் இன்னும் திமுக பாசம் மிச்சமிருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், தமிழகத்தின் கடன் சுமைக்கு திமுகதான் பதிலளிக்க வேண்டும் என திருமாவளவன் தற்பொழுது கூறியிருப்பது, திமுக மீதான விசிகவின் பாசத்தையும், தற்போதைய அரசியல் நிலைப்பாட்டையும் பெரிய அளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…