தமிழகமே கொதிக்குது… அண்ணாமலை திடீர்னு அமெரிக்கா… அண்ணாமலையின் ‘மர்ம மௌனம்’… பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்…!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆளும் தவெக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே தினசரி அரசியல் பஞ்சாயத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அதிமுகவின் முக்கிய எம்.எல்.ஏ-க்களும் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோரும் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு புறம், தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலை மேலும் கொதிநிலைக்கு தள்ளியுள்ளது.

இப்படிப்பட்ட அசாதாரணமான மற்றும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை இதைப் பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இன்று மதியம் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்கிறார். கடந்த ஆண்டு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர், சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியிலிருந்தே முழுமையாக விலகினார். தற்போது ‘We The Leaders’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதை ஒரு அரசியல் கட்சியாக மாற்றும் முனைப்பில் மாவட்ட வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார். பாஜகவில் இருந்து விலகிய பிறகு பத்திரிகையாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வரும் அவர், சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் மட்டுமே தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

அண்ணாமலை மாநில பாஜக தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி மீது தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், அண்ணாமலை இன்று காலை வரை இது குறித்து எந்தவொரு கருத்தும் கூறாமல் மௌனம் காப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் அனல் பறக்கும் சூழ்நிலையிலும், அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அண்ணாமலை தனது பயணத்தைத் தொடர்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Visaka

Recent Posts

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

2 minutes ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

12 minutes ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

22 minutes ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

32 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

38 minutes ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

42 minutes ago