Categories: சினிமா

தாய்லாந்தில் பிரம்மாண்டமாக நடந்த வரலட்சுமி திருமணம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரலட்சுமி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

முன்னதாக சங்கரின் பாய்ஸ், பாலாஜி சக்திவேலின் காதல் உள்ளிட்ட படங்களில் நடிக்க வரலட்சுமிக்கு சான்ஸ் கொடுக்கப்பட்டது. விஜய் நடித்த சர்க்கார், தனுஷ் நடித்த மாரி 2, விஷால் நடித்த சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமிக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நிகழ்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி என திரையுலகையைச் சேர்ந்த ஏராளமானவருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை லீலா பேலஸில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அதன் பிறகு தாய்லாந்தில் வைத்து வரலட்சுமி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த போட்டோஸ்  சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

5 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

6 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago