நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் தான் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.

அதன்பிறகு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வனிதா விஜயகுமார் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு இரண்டு திருமணங்கள் செய்தார். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.

இப்போது அடுத்தடுத்த படங்களில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது.

இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக வனிதா ராபர்ட் மாஸ்டரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு தான் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்ற வனிதா தற்போது தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இப்படியான நிலையில் வனிதாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவரும் அம்மாவுடன் வசித்து வரும் நிலையில் மகன் விஜயஹரி யை சிறுவயதிலேயே அவருடைய தாத்தா விஜயகுமார் எடுத்துச் சென்ற நிலையில் தாத்தா குடும்பத்துடன் தான் விஜயஸ்ரீ வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மனிதாவின் மகன் விஜயஹரி சிறுவயதில் இருக்கும்போது விஜய் தன்னுடைய மனைவியுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இதுவரை பலரும் பார்க்காத அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

