“விஜய் – திரிஷா சர்ச்சை: ‘இத நான் சும்மா விடமாட்டேன்’.. நயினாருக்கு எதிராக கொதித்தெழுந்த வானதி சீனிவாசன்…!

Spread the love

நடிகை த்ரிஷா குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு, அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போதும் நாகரிகமாகவும் பண்பாகவும் பேசக்கூடிய நயினார் நாகேந்திரன், ஏன் இது போன்ற கருத்தைக் கூறினார் என்று தெரியவில்லை என்றும், இந்த விவகாரம் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து பாஜக எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் அவரிடம் தனது கருத்தை முன்வைக்கப் போவதாகவும் கூறினார். அதே சமயம், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று அவர் காட்டமாகப் பதிலடி கொடுத்தார்.

திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அக்கட்சியின் மேடைப் பேச்சாளர்கள் பலமுறை பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் பேச்சுகளை அனுமதிக்கும் திமுக, தற்போது ஒரு சிறிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி அரசியல் நாடகம் ஆடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பெண்களின் வாக்கு வங்கியைப் பெறுவதற்காக திமுக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும், ஆனால் தமிழகப் பெண்கள் எதனையும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நயினார் நாகேந்திரனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரம் திமுகவில்தான் வேரூன்றி இருப்பதாக வானதி சீனிவாசன் தனது பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“ஒரு கை ஸ்டீயரிங், மறு கை பட்டாசு”…. உயிரோடு விளையாடும் விபரீத இளைஞர்கள்…. துவாரகா விரைவுச்சாலை ஸ்டண்ட் வைரல் வீடியோ….!

துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…

7 minutes ago

“பூமி உருண்டைல அப்படி ஒரு இடமே இல்லையாம்”…. ரூ.300 கோடி நூலகத்தில் நடந்தேறிய அதிர்ச்சி மோசடி…. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?…. விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்….!

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

11 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

14 minutes ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

17 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

22 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

23 minutes ago