#image_title
பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வணங்கான் திரைப்படம் உருவானது. இந்த படத்தில் சூர்யா தான் முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அருண் விஜய் வணங்கான் படத்தில் கமிட்டாகி நடித்தார். இந்தப் படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.
இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். வணங்கான் திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயாதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல இசையப்பாளரன ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் ரிலீசான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அடுத்ததாக கிரிஷ் திருக்குமரன் இயக்கும் ரெட்ட தல என்ற படத்திலும் அருண் விஜய் நடித்து வருகிறார். சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசையமைக்கும் ரெட்ட தல படத்தை பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார்.
வணங்கான் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தநிலையில் வருகிற ஜூலை மாதம் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…