#image_title
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை திரும்பி இருக்கின்றார் நடிகர் அஜித். தற்போது மனைவியுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித், இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற அனைத்திலும் கை தேர்ந்தவர். இவர் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகிறார்கள். என்னதான் நடிகர் அஜித் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவருவதில்லை.
குறிப்பாக குழந்தைகளின் பிறந்தநாள், மனைவியின் பிறந்த நாள் என அனைத்துக்கும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வந்து விடுவார். இல்லையென்றால் தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று அனைத்தையும் சிறப்பாக கொண்டாடிவிடுவார் நடிகர் அஜித். கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.
அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பு இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சென்ற வேகத்திலேயே சென்னை திரும்பி இருக்கின்றார் அஜித். மேலும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் நடிகர் அஜித் அவசர அவசரமாக சென்னை திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது.
இது ஒரு சின்ன சர்ஜரி தான் மற்றபடி வேற எந்த பிரச்சினையும் கிடையாது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் நடிகர் அஜித் அஜர்பைஜானிலிருந்து தற்போது காதல் மனைவியை பார்ப்பதற்கு வந்து இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…