Categories: சினிமா

7 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.. கவிப்பேரரசு வைரமுத்துவின் எண்ணிலடங்கா சாதனைகள் இதோ..!!

Spread the love

கவி பேரரசு வைரமுத்து கடந்த 1953-ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பிறந்தார். இன்று அவர் தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் வைரமுத்து செய்த சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். வைரமுத்து திரைப்பட பாடலில் பல புதிய சொற்களை உருவாக்கியவர். தாவணி விசிறிகள், தீயின் தாகம், ராஜ மேகங்கள், அழகான ராட்சசி, அமுத கானம், பூவுக்குள் பூகம்பம் என பல வார்த்தைகளை உபயோகப்படுத்தி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பாட்ஷா திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் எட்டுக்குள்ள மனுஷன் இருக்கான் ராமையா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடலை எழுதியவர் வைரமுத்து தான். இதில் சிறப்பு என்னவென்றால் 8 நிமிடத்திற்குள் வைரமுத்து அந்த பாடலை எழுதி முடித்து விட்டாராம். வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. வைரமுத்துவின் பல்வேறு கவிதைகள் தமிழ்நாட்டு பாடநூல் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக பாடங்களில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது 7 முறை கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. ஏழு முறை இந்த விருதை வென்ற ஒரே பாடலாசிரியர் வைரமுத்து தான். தமிழ்நாடு அரசின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது ஆறு முறை வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளையும் வைரமுத்து தன்வசம் ஆக்கினார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, யுக்தாமுகி ஆகிய நான்கு உலக அழகிகளுக்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் என்ற பெருமை வைரமுத்துவை சேரும். தமிழ் திரைப்பட பாடல்கள் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் நீளமான பாடலாகும். அதனை வைரமுத்து தான் எழுதினார். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பெரும்பாலான பாடல்களை எழுதியவர் வைரமுத்து. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 80- க்கும் மேற்பட்ட மொழி இசையமைப்பாளர்களின் இசைக்கு தனது வரிகளால் சிறப்பு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

4 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

28 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

47 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

51 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

56 minutes ago