#image_title
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதைதான் கடந்த ஒரு வாரமாக நடக்கும் சர்ச்சைகள் நமக்கு சொல்கின்றன.
இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
ஆனால் ஒரே ஒரு பாடலை இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு வைரமுத்து இளையராஜா இசையில் எழுதினாராம். அதுவும் நேரடி படம் இல்லையாம். கமல், ராதிகா நடிப்பில் கே விஸ்வநாத் இயக்கிய சுவாதி முக்த்யம் திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர்.
அப்போது அந்த படத்தின் அனைத்து பாடலையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இளையராஜா இல்லாமலேயே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதான் இளையாராஜா இசைக்கு வைரமுத்து எழுதிய கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தபடத்திலும் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…