“ஊழல் அதிகாரிகள் லிஸ்ட் ரெடி”….. ஃபைல்ஸ் மூவ் ஆக மாட்டேங்குது….. முதல்வர் விஜய்க்கு வைகோ போட்ட பகிரங்க குண்டு…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், “என்னுடைய இன்ப துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, நகையோ புடவையோ கேட்காமல் வாழ்ந்து வரும் எனது மனைவி ரேணுகா தேவிக்குத்தான் எனது சுயசரிதை நான்கு தொகுப்புகளையும் அர்ப்பணித்துள்ளேன். இலக்கியங்களில் பேசத் தொடங்கினால் நீண்ட நேரம் பேசுவேன் என்றாலும், இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்து கேட்கும் மக்களுக்கு எனது நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அத்துடன், “1994-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நான் மேற்கொண்ட நடைபயணத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அன்றைய காலகட்டத்தில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களோ தொலைக்காட்சி ஊடகங்களோ இல்லாததால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மக்களிடம் முழுமையாகச் சென்று சேரவில்லை. ஆனால், அன்று என்னுடன் திரண்ட தொண்டர்களும் மக்களும் இன்றும் என் பக்கம் உறுதியாக நிற்கின்றனர். மத்திய அமைச்சர் பதவியை ஏற்க வேண்டாம் என்று அன்று நான் எடுத்த முடிவு முற்றிலும் சரியானது” என்று வைகோ தனது பழைய நினைவுகளையும் அரசியல் பயணத்தையும் பகிர்ந்துகொண்டார்.

அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய வைகோ, “அரசியலுக்கு ஊழலே மிகப்பெரிய புற்றுநோய். அதை அறவே களைந்தெறிய வேண்டும் என்ற உறுதியான முடிவோடு முதல்வர் ஜோசப் விஜய் செயல்பட்டு வருகிறார். ஆனால், மாதம் தோறும் லட்சங்கள் மற்றும் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய சில அதிகாரிகள், இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை எப்படியாவது ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோப்புகளை நகர்த்தாமல் முடக்கி வைக்கின்றனர்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், “அரசுத் துறைகளில் ககன்தீப் சிங் பேடி போன்ற நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்கள், ஊழல் அதிகாரிகளும் இருக்கிறார்கள். எனவே, அரசாங்கத்தை முடக்கும் எண்ணம் கொண்ட அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களைப் பதவிகளில் இருந்து விடுவிக்க வேண்டும். அதேவேளையில், புதிதாக வந்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகளில் நேர்மையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யிடம் எனது கருத்தாக முன்வைத்துள்ளேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago