தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் பயணம் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இரண்டு மாநாடுகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.
இதனால் விஜயின் அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவுகள் குவிந்தாலும் மறுபக்கம் அரசியல் பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதாக அவரைக் காண மக்கள் கூடுவதாகவும் ஆனால் தேர்தல் களத்தில் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சக்தியை விஜயால் ஏற்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இருந்தாலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ ஒருவேளை விஜய்க்கு வருங்காலத்தில் ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்திய இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று தாம் விமர்சித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை…
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மே 16 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தனது விவாகரத்து விவகாரம்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிடமிருந்து முறைப்படி சுதந்திரத்தை அறிவிப்பதற்கு எதிராக தைவானை எச்சரித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான…
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும்…
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), தற்போதைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ தனது பிள்ளைகளை…
தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…