“என்கிட்ட பணம் இல்லை… அதான் அன்னைக்கு இபிஎஸ்”…. கண் கலங்கிய வைகைச்செல்வன்… அதிமுகவை விட்டுப் பிரிய இதுதான் காரணமா?… வெளிவந்த உள்கட்சி உண்மை…!

Spread the love

முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான வைகைச்செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுகவை விட்டு விலகியதற்கான காரணங்கள் மற்றும் தவெகவை தேர்ந்தெடுத்ததன் பின்னணி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு வேதனையான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 9 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்தபோதிலும், கட்சியில் ஏற்பட்ட காயங்கள், ஏமாற்றங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளே தனது விலகலுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் முக்கியத் தலைவர்கள் விலகும்போது படைகள் பலவீனமடையும் என எச்சரித்தும் எடப்பாடி பழனிசாமி அதை அலட்சியப்படுத்தியதாகவும், அதன் விளைவாகவே தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுகவை எதிர்த்து உருவான அதிமுக, தற்போது அதனுடன் சமரசம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிட இயக்கங்களின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எளிய பின்புலம் கொண்ட சாமானியர்களையும் அரசியலில் உயர்த்திக் காட்டியதாகக் கூறி கண்கலங்கினார். ஆனால், இன்றோ பல கோடிகளைச் செலவு செய்யக்கூடிய வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், தன்னிடம் பணம் இல்லாத காரணத்தாலேயே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் நா தழுதழுக்கக் கூறினார். திராவிட சித்தாந்தம் சிதைக்கப்பட்டதன் வெளிப்பாடே தவெக போன்ற புதிய இயக்கங்களின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்துப் பேசிய வைகைச்செல்வன், அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் எம்.ஜி.ஆரைப் போன்ற ஈர்ப்பையும், ஜெயலலிதாவைப் போன்ற தாயுள்ளத்துடன் கூடிய அரவணைப்பையும் தான் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். “தீய சக்தி திமுக” என்ற விஜய்யின் துணிச்சலான களப்பணியும், மக்கள் மீது அவர் காட்டும் அன்பும் தன்னைக் கவர்ந்ததாகக் கூறிய அவர், நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் கொண்ட புதிய அரசியல் மாற்றத்தை தவெக உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

27 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

36 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

1 மணத்தியாலம் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

1 மணத்தியாலம் ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

2 மணத்தியாலங்கள் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago