Categories: CINEMA

என்னப்பா சொல்றீங்க.. விஜய்யின் இந்த ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலுவா..? நம்பவே முடியலையே..!

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு தானாம். இந்த தகவலை அப்படத்தின் இயக்குனர் எழில் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் காதல் பின்னணி கொண்ட பீல் குட் திரைப்படங்களில் அதிகம் நடித்து வந்தார். அதிலும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.

சில்வர் ஜூப்ளிக் கொண்டாடிய இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது வடிவேலு தானாம்.  நான் 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த திரைப்படம் விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானதே இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான். இப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் மணிவண்ணன், தாமு, பொன்னம்பலம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட் என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம் சார்பாக ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் 200 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக வடிவேலு தான் நடிக்க இருந்தாராம். இது குறித்து சித்ரா லட்சுமணன் உடன் பேட்டியில் பேசியிருந்தார். அதில் இந்த திரைப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறினேன். ஆனால் ஹீரோயினுக்கு கண் தெரியாது என்று கூறியதும் பலரும் இப்படத்திலிருந்து பின்வாங்கி விட்டார்கள்.

ஒரு முறை வடிவேலுவை சந்தித்தபோது படத்தின் கதையை கூறினேன். அவர் கேட்டதும் நான் தான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒப்புக்கொண்டார். அவரே ஒரு சில தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை கூறினார். பின்னர் என்னது நண்பர்கள் பலரும் இந்த படத்தை பிரபல நடிகர்களை வைத்து இயக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதன் பிறகு தான் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரியுடன் கதையை கூறி, ஓகே சொன்ன பிறகு தான் விஜயின் கால்ஷீட் அவர்கள் வாங்கி கொடுத்தார்கள் என்று அவர் பேசியிருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

நான் எவ்வளவோ சாதிச்சேன்… ஆனா இது மட்டும் என்னால பண்ண முடியல – பாரதிராஜா வருத்தப்படும் அந்த விஷயம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

2 நிமிடங்கள் ago

நெருங்கும் திருமணம்.. குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சர்ச்தேவ் ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து திருமண அழைப்பிதழ்…

11 நிமிடங்கள் ago

மனைவியோட ஹோட்டல்ல தங்கியிருந்த முரளிய காலி பண்ண சொல்லிட்டாங்க… அப்ப நாங்கதான் உதவி பண்ணோம்- பிரபல நடிகர் தகவல்!

பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம்…

12 நிமிடங்கள் ago

கவுண்டமணி இந்த காரணத்துனாலதான் சந்தானத்தோட சேர்ந்து நடிக்கல… பிரபல நடிகர் சொன்ன காரணம்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே…

2 மணி நேரங்கள் ago

இந்தியன் தாத்தா கெட்டப்புக்கு இன்ஸ்பிரேஷன் இந்த உலகப் புகழ்பெற்ற ஆன்மிகவாதிதானா?… அட இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே.…

3 மணி நேரங்கள் ago

அந்த வார்த்தையை சொல்லாதீங்க.. பெண்களை அதை மட்டும் வச்சி எடை போடுறது எனக்கு பிடிக்காது.. நச்சுன்னு பதில் சொன்ன பெப்சி உமா..!!

90ஸ் காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வந்தவர் பெப்சி உமா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்…

12 மணி நேரங்கள் ago