Categories: சினிமா

இந்தியன் தாத்தா கெட்டப்புக்கு இன்ஸ்பிரேஷன் இந்த உலகப் புகழ்பெற்ற ஆன்மிகவாதிதானா?… அட இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே. வெற்றிகரமான நடிகராக விளங்கினாலும் கமல் பரிசோதனை முயற்சிகள் செய்யாமல் இருந்ததில்லை. அப்படி செய்து அவர் கையை சுட்டுக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

90 களில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த காலகட்டத்தி மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இந்தியன் உருவாகியிருந்தது.

#image_title

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகி ஒருவர், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடுகிறார். இந்த ஊழல் படிந்த நாட்டில் தன் மகனும் ஒரு குற்றவாளியாக இருப்பதையறிந்து அவனையும் களையெடுக்கிறார். இப்படி ஒரு கதையை மிகப் பிரம்மாண்டமாக இரு காலகட்டங்களில் உருவாக்கி இருந்தார் ஷங்கர். இந்த படத்தின் வெற்றி எந்தளவுக்கு என்றால்  அதற்கு முன்னர் வெளியாகி வசூலில் கலக்கிய பாட்ஷாவின் வசூலை முந்தியது. அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது கமல் வயதான கெட்டப்பில் நடித்ததுதான். அதற்காக பிரத்யேகமாக ஹாலிவுட்டில் இருந்து ஒரு கேமராமேனை அழைத்து வந்து தமிழ் சினிமாவில் புராஸ்தட்டிக் மேக்கப்பை அறிமுகப்படுத்தினார். அந்த கெட்டப் ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கெட்டப்புக்குக் கமல்ஹாசன் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகவாதியான ஜே கிருஷ்ணமூர்த்தியின் முகத்தைதான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு போடசொன்னாராம். இப்போது கவனிக்கையில் இந்தியன் தாத்தாவின் முகத்தில் ஜே கேவின் சாயல் இருப்பதை உணர முடிகிறது.

vinoth

Recent Posts

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

5 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

10 minutes ago

“நான் கனவு காண்கிறேனா?”… வீட்டிற்குள் கேட்ட கீச் கீச் சத்தம்!… வீட்டைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… 90 முட்டைகள் தானாகவே பொரிந்த அதிசயம்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ!

வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…

12 minutes ago

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

23 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

31 minutes ago