#image_title
நடிகர் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சர்ச்தேவ் ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து திருமண அழைப்பிதழ் வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது வரை பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வருகின்றார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு வருகிற ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேலைகளை குடும்பத்துடன் செய்து வருகிறார்கள்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் இவருக்கு வில்லி கதாபாத்திரம் மிக பொருத்தமாக இருந்தது. விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து சண்டக்கோழி 2, பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பாக நடித்த அசத்தி இருப்பார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். சமீபத்தில் 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சரத்குமார் குடும்பத்தினர் திருமண பத்திரிகை கொடுக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் உடன் இணைந்து தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களை வைத்து வந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி உலகநாயகன் கமலஹாசன், பிரபு, இயக்குனர் பாலா, மணிரத்தினம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினியும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை கொடுத்திருந்தார்கள்.
பின்னர் தெலுங்கு சினிமாவில் சமந்தா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, பாலையா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் நடிகை வரலட்சுமி திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை தொடர்ந்து நேற்று ஜூன் 28ஆம் தேதி நடிகர் சரத்குமார் அவரின் மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் ,நிக்கோலாய் சர்ச்தேவ் ஆகியோர் டெல்லிக்குச் சென்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து திருமண அழைப்பிதழ்களை கொடுத்திருந்தார்கள்.
இது தொடர்பாக நடிகை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகப்பெரிய பாக்கியம். மிக பிசியாக இருந்தாலும் எங்களுடன் அதிக நேரம் செலவிட்டார். அவரை எங்கள் திருமணத்திற்கு அழைத்ததில் எங்களுக்கு பெருமை. அதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் சீதாராமன் மற்றும் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் முருகன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி. உங்களை வரவேற்பு நிகழ்ச்சியில் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன். மொத்தத்தில் டெல்லியில் ஒரு அற்புதமான நாள்” என்று பதிவிட்டு இருக்கின்றார்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…