#image_title
பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பகல் நிலவு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது. அதன் பிறகு முரளி நடித்த புது வசந்தம், இதயம் கடல் பூக்கள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
கடல் பூக்கள் திரைப்படத்தில் நடித்ததற்காக முரளிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. முரளி முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, கார்த்திக், பார்த்திபன், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, சிம்ரன், தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது முரளியின் வாரிசுகளான அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் முரளி அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். அவரைக் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதும் தமிழ்நாட்டு மக்கள்தான்.
தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது முரளிக்குத் திருமணம் ஆனது. மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு ஹோட்டலில் தங்கி வாழ்ந்துள்ளார். ஆனால் அப்போது அவருக்குப் படங்கள் குறைந்து கையில் காசு இலலாததால் ஹோட்டலில் இருந்து அவரை காலி பண்ண சொல்லியுள்ளார்கள்.
அப்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்த முரளிக்கு நடிகர் பாவா லட்சுமணன் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து உடனடியாக வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்து வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து தங்கவைத்தார்களாம். இந்த தகவலை பாவா லட்சுமணனே சமீபத்தைய நேர்காணலில் தெரிவித்துள்ளாராம். அதனால் இப்போது கூட எப்போது பார்த்தாலும் முரளியின் மனைவி அவரைப் பார்த்து பாசமாக நலம் விசாரிப்பாராம்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…