தமிழ் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை சுமதி. இவர் தனது வாழ்க்கை குறித்து முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் சுமதி கூறியதாவது, திரை உலகில் பல வருடங்களாக நடித்து வந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அடுத்த லெவலுக்கு என்னால் போக முடியவில்லை. 50-க்கு மேற்பட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு சார் என்னை பார்த்தால் நன்றாக பேசுவார். எனக்கு 16 வயது இருக்கும் போதே மாமாவை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அவர் எப்போதும் குடிப்பதையே வழக்கமாக கொண்டார். மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகும் என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் உறவினர் ஒருவருடன் என்னை இணைத்து தவறாக பேசினார்.
ஒரு கட்டத்தில் யாருடன் எனது கணவர் என்னை சேர்த்து வைத்து தவறாக பேசினாரோ அவரிடம் சென்று என்னை கண்காணாத இடத்திற்கு கூட்டிட்டு போங்க என்று கூறினேன். அவரும் என்னையும் எனது மூன்று பிள்ளைகளையும் சென்னைக்கு அழைத்து வந்தார். அவரை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது கணவருடன் வாழ்க்கையில் தொடங்கினேன். காலங்கள் கடந்து எனது பிள்ளைகள் இளம் வயதை அடைந்தவுடன் சொந்த ஊருக்கு சென்றனர்.
ஒரு போன் கூட செய்து என்னை விசாரிக்க மாட்டார்கள். நான் ஏதாவது சம்பாதித்துக் கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்வார்கள் என எமோஷனலாக பேசியுள்ளார். இப்போது வரை சுமதியை அவரது இரண்டாவது கணவர்தான் நன்றாக பார்த்து கொள்கிறாராம். மேலும் யோகி பாபு, சூரி, நரேன் ஆகியோர் என்னை பார்த்தால் எப்போதுமே பணம் கொடுத்து உதவி செய்வார்கள் என பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…