Categories: சினிமா

ராதிகா என்ன நடிக்க கூப்பிட்டா Avoid பண்ணிடுவேன்.. அதுக்கு இதுதான் காரணம்.. ஓபன்னாக பேசிய நடிகை வடிவுக்கரசி..!

Spread the love

நடிகை ராதிகாவை பார்த்தால் எனக்கு சற்று பயம் இருக்கும் அதனால் அவர் நடிக்க கூப்பிட்டால் கூட அவாய்ட் பண்ணி விடுவேன் என்ற ஒரு பேட்டியில் நடிகை வடிவுக்கரசி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவுக்கரசி.

தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்குப் பொருந்தும் வகையில் சிறப்பாக நடிப்பார். இவரது முகம் மற்றும் கம்பீரக் குரல் இவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த வடிவுக்கரசி 1979 ஆம் ஆண்டு கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தில் ராஜேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்தில் வயதான கேரக்டரில் சிவாஜியின் மனைவியாக நடித்த அசத்தியிருப்பார். தொடர்ந்து ஏராளமான படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட  மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி கொண்டிருக்கின்றார்.

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் வடிவக்கரசி தற்போது டிவி சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்திருக்கின்றார்.. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தனது வாழ்வில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசியிருந்தார் அதில் ராதிகா உடனடியாக உறவு குறித்து பேசி இருந்த வடிவுக்கரசி நடிகை ஸ்ரீபிரியா மூலமாக தான் ராதிகா எனக்கு அறிமுகமானார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து மெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தோம். மிகவும் தன்மையாக பழகக் கூடியவர். அவர் சந்தோஷமாக இருந்தால் சொல்லுங்கள் வடிவுக்கரசி அக்கா என்று மிகவும் பாசமாக பேசுவார்.  அதுவே சொல்லுங்க வடிவு என்று அவர் கூறுகிறார் என்றால் சற்று கோபமாக இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனாலேயே அவருடன் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவேன். பலமுறை அவருடன் சீரியலில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வந்த போதிலும் அதை எப்படியாவது அவாய்ட் பண்ணி விடுவேன். அவர் மீது தனக்கு சற்று பயம் இருக்கின்றது. ஏதாவது கோபமாக பேசிவிட்டால் அல்லது சண்டை வந்துவிட்டால் அது சரியாக இருக்காது என்பதால் நான் அவரிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருப்பேன்” என்று அந்த பேட்டியில் வடிவுக்கரசி பேசியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க”… திறந்தவெளி வடிகாலில் நழுவி விழுந்த சிறுமி… உயிரைப் பணயம் வைத்து தூக்கிய சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…

2 minutes ago

BREAKING: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்… பள்ளிகளில் இனி மாதம்… ஒரு நாள் No Bag Day… அமைச்சர் உத்தரவு…!

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…

10 minutes ago

“மருத்துவ அறைக்குள் வெறிச்செயல்!”… கேள்வி கேட்ட கையோடு டாக்டர் மீது கொடூர தாக்குதல்… நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்…!!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…

11 minutes ago

பணம் பறிக்க நடந்த கொடூரமா?… அமெரிக்காவில் 28 வயது இந்தியர் துள்ளத்துடிக்கக் கொலை… கதறி அழும் பெற்றோர்…!!

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…

26 minutes ago

அடச்சீ… பொம்பள மேல கையை வைப்பியா?… காக்கிச் சட்டையைக் கிழித்து… தர்ம அடி கொடுத்த சகோதரிகள்… நடுரோட்டில் அதிரவைக்கும் சம்பவம்…!!

உன்னாவ் பகுதியில் இ-ரிக்‌ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்‌ஷா…

32 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்… போட்டோவை வெளியிடுவேன்… பிளாக்மெயில் செய்த முன்னாள் தோழன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!

பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…

33 minutes ago