#image_title
சாதாரணமாக நாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் டயர்களில் ஏர் செக் செய்வது வழக்கம். அவ்வாறு நாம் ஏர் செக் செய்யும் போது ஏர் நிரப்பியானது இரண்டு வகைகளில் இருக்கும் ஒன்று சாதாராண காற்று. மற்றொன்று நைட்ரஜன் நிரப்பப்பட்ட குழாய். பெரும்பாலும் டூ வீலர்களுக்கு சாதாரண காற்றைத் தான் நிரப்புவார்கள். ஆனால் கார்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்புவதைப் பார்த்திருக்கிறோம். ஏன் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது? சாதாரண காற்றுக்கும் நைட்ரஜன் வாயு நிரப்புவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம்.
சாதாரண காற்றிற்கும் நைட்ரஜன் காற்றிற்கும் சிறிது அளவே வித்தியாசம் உள்ளது. சாதாரண காற்றில் 78% சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்ஸிஜன், மற்றம் 1 சதவீதம் இதர காற்று இருக்கும். ஆனால் சாதாரண காற்றுடன் ஒப்பிடும்போது, நைட்ரஜன் கார் டயர்களின் ஆயுளை அதிகரிக்கிறது. சாதாரண காற்றை விட இந்த நைட்ரஜன் காற்றை உயர்த்துவதன் ஒரு நன்மை என்னவென்றால், டயர் அதிக வெப்பத்தை உருவாக்கினால், இந்த காற்று வெப்பநிலையைக் குறைக்க உதவும்.
#image_title
இதுமட்டுமின்றி ரேஸ் பைக்குகளில் நைட்ரஜன் வாயுவே நிரப்பப்படுகிறது. ஏனெனில் அது ஸ்திரத் தன்மையை அதிகரிக்கிறது. சாதாரண காற்றில் உள்ள 28 சதவீதமும் 1 சதவீத காற்றும் அதிக சூடு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளியே வாய்புள்ளது. இதனால் டயரில் உள்ள பிரஷர் குறையும். ஆனால் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறைப்பது குறைவு.
சைக்கிள் பயணம்..கிராமத்து வாழ்க்கை.. IT உலகின் ஜாம்பவான் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை
முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடித்தல் பயம் கிடையாது. ஆனால் சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ரிம்மில் உள்ள இரும்பு ஈரமாகும் சமயங்களில் டியூப்பையும் தாண்டி ரிம்மில் உள்ள இரும்புடன் ரியாக்ட் ஆகி விரைவில் துரு பிடிக்கும் வாய்ப்புள்ளது.
#image_title
முக்கியமாக நைட்ரஜன் காற்று முழுமையாக இருந்தால் பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் என்பது அதிகரிக்கும். மேலும் சிறந்த மைலேஜிற்கும் நைட்ரஜன் ஏர் மிகவும் உதவுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று வழக்கமான காற்று இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம். நைட்ரஜன் ஏர் பிடிக்க 10,20 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை…
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot…
சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில், ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.…
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…