“குடிநீருக்குக்கூட வழியில்லை”… அமெரிக்காவின் தாக்குதலால் கண்ணீரில் தவிக்கும் ஈரான் மக்கள்…. உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து….!

Spread the love

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் நவீன ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்த சில நிமிடங்களிலேயே, அமெரிக்கா இரவோடு இரவாக ஈரான் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் திடீர் அதிரடித் தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தற்பொழுது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய இந்த இரவுநேரத் தாக்குதலில், தெற்கு ஈரானின் சிரிக் (Sirik) நகரில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி வாழ் கடலோர நகரின் மக்களுக்குக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலைக் கடுமையான மனித உரிமை மீறலாகச் சாடியுள்ள மும்பையில் உள்ள ஈரான் தூதரகம், “பொதுமக்களுக்கான நீர் உள்கட்டமைப்பைத் திட்டமிட்டு குறிவைத்து தாக்குவது மனிதாபிமானமற்ற செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக, ஈரானிய ரேடார் தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் தகர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் (Al-Azraq) அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானங்கள் நிறுத்தப்படும் ஹேங்கர்கள் மற்றும் கட்டளை-கட்டுப்பாட்டு மையம்உள்ளிட்ட நான்கு முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மீண்டும் தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முற்பட்டால், அதற்கு “கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி” கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

தொடர்ச்சியான இந்த ராணுவத் தாக்குதல்களால் உலக நாடுகளின் வர்த்தகப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய எண்ணெய் நெருக்கடியும் கடுமையான பொருளாதாரத் தேக்கமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் விவகாரத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் தொலைபேசியில் கடுமையான விவாதங்களை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அமெரிக்கா நேரடியாக ஈரானுடன் போரில் இறங்கியிருப்பது சர்வதேச சமூகத்தில் பெரும் கவலையையும் உலகப் பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

5 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

23 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

29 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

41 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

47 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

58 minutes ago