1983-க்கு பிறகு முதல்முறை… டிரம்பிற்கு வந்த திடீர் ஆபத்து… அமெரிக்காவை உலுக்கும் புதிய பிரச்சனை… உலக நாடுகள் அதிர்ச்சி….!

Spread the love

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான பதற்றத்தைத் தணித்து, அமைதியைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், அவருக்கு உள்நாட்டிலேயே எதிர்பாராத புதிய நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது. அமெரிக்காவின் மிக முக்கிய எண்ணெய் சேமிப்பு மையங்களில் கச்சா எண்ணெய் இருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாகக் குறைந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரம், டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக எண்ணெய் சேமிப்பு மையமும், கச்சா எண்ணெய் விலை நிர்ணய இடமுமான ஓக்லஹோமாவின் கஷிங் (Cushing) மையத்தில், எண்ணெய் இருப்பு கடந்த வாரம் 1.6 மில்லியன் பேரல் குறைந்து 20 மில்லியன் பேரலாகச் சரிந்துள்ளது. கடந்த எட்டு வாரங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் இந்த இருப்பு, 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். கஷிங் மையத்தில் எண்ணெய் இருப்பு 20 மில்லியன் பேரலுக்குக் கீழ் சென்றால், சுத்திகரிப்புக்காக எண்ணெயை வெளியேற்றுவது தொழில்நுட்ப ரீதியாகக் கடினமாவதுடன், வண்டல் மற்றும் தண்ணீர் கலந்து அதன் தரமும் குறையும் அபாயம் உள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் அவசரகாலப் பயன்பாட்டிற்கான மூலோபாய எண்ணெய் இருப்பும் (Strategic Petroleum Reserve) சுமார் 340 மில்லியன் பேரலாகச் சரிந்துள்ளது. இது 1983-க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். உலகளாவிய எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 172 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தையில் வெளியிடப்பட்டதே இந்த வரலாற்றுச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாறு அமெரிக்காவின் இரண்டு முக்கிய எண்ணெய் இருப்புகளும் ஒரே நேரத்தில் சரிந்துள்ள அரிதான சூழ்நிலை, அந்நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த உள்நாட்டு எண்ணெய் தட்டுப்பாட்டுப் பிரச்சனையைக் சமாளிக்கவே, அதிபர் டிரம்ப் ஈரான் உடனான மோதலை வேக வேகமாக முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிடுகிறார். தற்போதைய நிலையில் அமெரிக்காவால் முழுமையான போரில் இறங்க முடியாது என்பதால், ஈரானுடன் சமாதானமாகப் போவதே சிறந்தது என டிரம்ப் கருதுகிறார். ஆனால், இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ஈரானுடனான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இஸ்ரேல் நெருக்கடி கொடுத்து வருவதால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகமும், அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago