நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்ய ஒப்பந்தமாகி உள்ளார். துபாயை சேர்ந்த கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் இசையமைக்க யுவன் சங்கர் ராஜா கமிட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர். 2வது முறையாக மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் அவர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…