“அந்த 4.5 மணி நேர ரகசியக் கூட்டம்”… டெல்லி எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் தமிழக பாஜக பிரமுகர்…. பொறுத்தது போதும் என பொங்கிய பிரதமர் மோடி…!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த மாற்றம் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் பதவி பறிக்கப்படலாம் (கல்தா) என்ற பரபரப்பு தகவல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. அண்மையில் 5 நாடுகளின் அரசுமுறைப் பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, நடத்திய நான்கரை மணி நேர அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்த பிறகே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்னணியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் முக்கியக் காரணியாக அமைந்துள்ளன. இதில் உ.பி, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைக்கவும், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதே இந்த அவசர மாற்றத்திற்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமையுடன் 2021 முதல் தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணையமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இவர் மூலமாகத் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த மேலிடம் திட்டமிட்டது. ஆனால், கடந்த 2011 ராசிபுரம், 2012 சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021 தாராபுரம், அண்மைய அவிநாசி சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 நீலகிரி நாடாளுமன்றத் தேர்தல் என தொடர்ந்து 5 தேர்தல்களில் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார். இந்தத் தொடர் தோல்விகளே தற்போது அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்தாக முடிந்துள்ளன.

மறுபுறம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியிருப்பது மாநில அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ள சூழலில், அதிமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்ட பாஜகவால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்ற முக்கியத் தலைவர்கள் தோற்றதால், தமிழகத்தில் பாஜகவை உயிர்ப்புடன் வைத்திருக்க இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தர டெல்லி மேலிடம் விரும்புகிறது. இதன் காரணமாகவே, மாநிலத் தலைவர் முதல் மாவட்டத் தலைவர்கள் வரை மாற்றப்பட உள்ளதோடு, எல்.முருகனுக்குப் பதிலாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

Nanthini

Recent Posts

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

21 minutes ago

இபிஎஸ்-ஐ முதல்வராக்க துள்ளிக்குதித்த உதயநிதி..? மே 4-ம் தேதி நடந்தது என்ன..?திமுக, அதிமுக ரகசியத் திட்டத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்..!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…

21 minutes ago

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

49 minutes ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

58 minutes ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

1 மணத்தியாலம் ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

1 மணத்தியாலம் ago