ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் முக்கியமானதாகும். அதுவும் படத்திற்கு பில் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம், அந்த படம் கட்டாயம் சூப்பர் ஹிட் தான். ஆண்கள் தான் வில்லனாக நடிக்க முடியுமா? பெண்களும் கலக்குவோம் என்று பல நடிகைகளும் போட்டி போட்டு வில்லியாக நடித்துள்ளனர். அதன்படி வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரம்யா கிருஷ்ணன்:
வில்லி கதாபாத்திரம் என்று வந்துவிட்டாலே அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பது ரம்யா கிருஷ்ணன் தான். படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக இவர் நடித்ததை பார்த்து அனைவருமே வாயை பிளந்து பார்த்தனர். படையப்பா திரைப்படம் வெளியாகி பல வருடமானாலும் நீலாம்பரியின் கர்ஜனையை அவ்வளவு இறுதியில் யாராலும் மறந்துவிட முடியாது.
வரலட்சுமி சரத்குமார்:
சண்டக்கோழி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியானது. இதில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். பல படங்களில் ஹீரோயினியாக நடித்த வரலட்சுமி சண்டக்கோழி படத்தில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து சர்க்கார் படத்திலும் விஜய்க்கு வில்லியாக நடித்திருந்தார்.
ரீமா சென்:
மின்னலே திரைப்படத்தில் அழகு பதுமையாக வளம் வந்தவர்தான் ரீமாசென். சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த வல்லவன் திரைப்படத்தில் அதிரடியான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் காதலிக்கும் காதலனிடம் என்ன லவ் பண்ற இல்ல என்று கேட்டு வில்லத்தனத்தில் பின்னி இருப்பார். இந்த படத்தைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் இவர் வில்லியாக நடித்திருந்தார்.
ஸ்ரேயா ரெட்டி:
தமிழ் சினிமாவில் வில்லத்தனத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக ஸ்ரேயா ரெட்டி தான் இடம் பிடித்துள்ளார். திமிரு திரைப்படத்தில் இவருடைய ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. 2006 ஆம் ஆண்டு விஷால், ரீமாசென் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தில் பெண்ணுக்கு உரிய நளினம் இல்லாமல் அடாவடியாக வரும் இவரை கண்டு பயப்படாதவர்களே இருக்க முடியாது. இப்படி ஒரு நடிப்பா இவரும் ஒரு பெண்ணா என்று கேட்கும் அளவுக்கு வில்லத்தனத்தில் அசத்தியிருந்தார்.
திரிஷா:
தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக பல திரைப்படங்களில் அசத்து இருந்த திரிஷா முதல்முறையாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் கொடி. தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் ஒரு முரட்டுத்தனமான வில்லியாக திரிஷா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டு பெற்றது.
ஜோதிகா:
நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருப்பார். முதலில் இந்த திரைப்படத்தில் வரும் ஹீரோயினியாக காட்டப்பட்டாலும் அதன் பிறகு இவரது வில்லத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரும். இந்த படத்தில் இவருடைய வில்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
ஐஸ்வர்யா ராய்:
இந்திய திரை உலகில் பிரபலமான நடிகை தான் ஐஸ்வர்யா ராய். இருவர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் பொன்னியின் செல்வன் நந்தினி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படத்தில் இவருடைய வில்லத்தனம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…