தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனாத கட்சியின் கிளை நிர்வாகிகளுக்கு மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் ஏற்பாட்டில் தீபாவளி பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், நம்பிக்கை உள்ளவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஞானம் எல்லாம் பிறக்கவில்லை, தேர்தல் பயம் தான் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தமிழகத்தின் இந்துக்கள் கொடுக்கப் போகின்றனர். 500 வாக்குறுதிக்கு மேல் மக்களுக்கு அல்வாவாக கொடுத்துவிட்டு அதில் 20% கூட தமிழக அரசு நிறைவேற்ற வில்லை. ஆகவே திராவிட அல்வா கடை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
அதை தான் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கூறினார்கள். தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக மாநில தலைமையும் தேசிய தலைமையும் முடிவு செய்யும். அன்புமணி ராமதாசை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வம், இந்தக் கூட்டணிக்கு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத கட்சியினர் வர இருக்கிறார்கள். பல கட்சிகள் என தான் குறிப்பிட முடியும். காலம் தான் அது எந்த கட்சி என முடிவு செய்யும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவில் ஒரு பெரிய கட்சி இணைய உள்ளது உறுதியாகி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…