“கொன்று புதைத்து விடுவேன்”…. தவெக பெண் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆடியோ லீக்… சீறிப் பாய்ந்த திமுக…. ஆட்சிக்கே ஆபத்தா….?

Spread the love

சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவதாகக் கூறிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆடியோ பதிவு, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபர்களை வர விட மாட்டேன் என்றும், அதை மீறிச் செயல்படுபவர்களைக் கொன்று புதைத்து விடுவேன் என்றும் அவர் மிரட்டும் தொனியில் பேசுவது போன்ற உரையாடல் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது புதிய அரசுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடர்பான பழைய வீடியோக்கள், விஜய் பாலாஜியின் சர்ச்சை பேச்சு, கீர்த்தனாவின் ஆய்வு ரீல்ஸ் என அடுத்தடுத்த சர்ச்சைகள் ஓய்வதற்குள் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் ஆடியோ விவகாரம் வெளிவந்துள்ளது. ஒன்றிய செயலாளர் ராஜகுரு என்பவரிடம் பேசும் போது, சாத்தூர் தொகுதியைச் சேர்ந்தவர் தனது தொகுதியில் அதிகாரிகளைச் சந்திக்கக் கூடாது எனக் கூறி மிரட்டியதாக அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. கட்சித் தலைமை எவ்வளவோ எச்சரித்தும், அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து இதுபோன்ற கட்டுப்பாடற்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது தவெக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள திமுக ஐடி விங், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களே, பொதுவெளியிலும் தொலைபேசியிலும் ரவுடிகளைப் போலக் ‘கொன்று புதைத்து விடுவேன்’ என மிரட்டுவது சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாகச் சாடியுள்ளது. அதிகார பலத்தைக் கொண்டு சட்டத்தைக் கையில் எடுக்கும் இத்தகைய வன்முறைப் போக்கைக் கண்டித்துள்ள திமுக, மிரட்டலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உடனடியாகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில், இந்தச் சர்ச்சை ஆடியோ குறித்து விருதுநகர் பகுதி மக்கள் மற்றும் கட்சி வட்டாரங்களில் வேறு சில விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வைரலாகும் ஆடியோ பதிவு, ஜெகதீஸ்வரி அமைச்சராவதற்கு முன்பு பேசப்பட்ட பழைய உரையாடல் என்றும், அதில் எதிர்முனையில் பேசிய நபர் அண்மையில்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியாயினும், புதிய அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அமைச்சர்கள் சுற்றியுள்ள சர்ச்சைகள் தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

Nanthini

Recent Posts

விவசாயிகள் ஷாக்… CM விஜய் அறிவித்த ரூ.75,000 கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் முழுசா கிடைக்கும்?…. லிஸ்ட்டுல உடனே செக் பண்ணுங்க….!

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…

3 minutes ago

BREAKING: அண்ணாமலைக்குப் பின் டெல்லியில் ஒலிக்கும் தமிழரின் குரல்…. தேசிய பாஜகவில் களமிறங்கிய ம.வெங்கடேசன்…. நிதின் நபின் அறிவிப்பு….!

பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…

9 minutes ago

பயங்கர சத்தம்..! சுக்குநூறான கட்டடம்..! 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறல்… நொடியில் நடந்த கோர விபத்து… பதறவைக்கும் வீடியோ…!!

பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…

25 minutes ago

“என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு”… புதிய அமைச்சர்களின் கமிஷன் லீக்ஸ்… விஜய்க்கு அண்ணாமலை வைத்த செக்…. அரசியலில் திடீர் பரபரப்பு…!

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…

26 minutes ago

பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கு…! மெட்ரோ விபத்தால் பதறிப்போன பெற்றோர்கள்… அரசுக்கு MNS வைத்த அதிரடி செக்…!!

மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…

35 minutes ago

“‘கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு கேட்டது ஒரு குத்தமா?”…. காதலியை வெட்டிக் கொன்று சாக்கில் அடைத்த இளைஞர்…. வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

36 minutes ago