புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடி கொடுத்தார். தனக்கு அனுபவம் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, “எனக்கு எடப்பாடியைப் போலப் பிறர் காலில் விழுந்து பதவியைப் பெறும் அனுபவமோ அல்லது சங்கி கூட்டத்திற்கு அடிமையாக இருக்கும் அனுபவமோ கிடையாது; நான் கலைஞரின் பேரன், எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பதே எனது பெருமை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட மடிக்கணினித் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அதிமுக மற்றும் பாஜகவின் சூழ்ச்சிகளை முறியடித்து பெண்களுக்குத் தொடர்ந்து நிதி உதவி வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் ஆலங்குடி தொகுதிக்குக் கூடுதல் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வருவதால், வரும் தேர்தலில் பாஜகவையும் அதற்கு அடிமையாக இருக்கும் அதிமுகவையும் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமியை ‘பத்து தோல்வி பழனிச்சாமி’ என்று விமர்சித்த உதயநிதி, அதிமுகவை பாஜக தனது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். பாஜக நேரடியாகத் தமிழகத்தில் நுழைய முடியாத காரணத்தால் அதிமுக என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு வருவதாகவும், ஆனால் தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ தான் என்பதை இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு நிரூபிக்கும் என்றும் அவர் சூளுரைத்தார். மெய்யநாதனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதன் மூலம், அவர் மீண்டும் அமைச்சராகித் தொகுதியில் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…