மரண அடி கொடுக்கத் தயாராகும் திமுக.. “தாத்தா கோட்டைக்கு குறி” தொகுதி மாறும் உதயநிதி..? மிரளும் எதிர்க்கட்சிகள்..!!

Spread the love

தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது தற்போதைய தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிக்கு மாற்றாக, திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருவாரூர் தொகுதியில்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2011 மற்றும் 2016-ல் வெற்றி பெற்றிருந்தார். அண்மையக் கணிப்புகளின்படி, சென்னையில் உள்ள சில தொகுதிகளில் திமுகவிற்குப் பின்னடைவு ஏற்படக்கூடும் எனத் தெரியவந்துள்ளதே இத்தகைய ஆலோசனைகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தற்போது திருவாரூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் பூண்டி கலைவாணன், இம்முறை நன்னிலம் தொகுதிக்கு மாற்றப்படலாம் எனவும், அவருக்குப் பதிலாக உதயநிதி அங்கு களமிறங்குவார் எனவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துத் தீவிர தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும், தொகுதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Soundarya

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

3 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

5 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

10 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

14 minutes ago

“ஒரு கை ஸ்டீயரிங், மறு கை பட்டாசு”…. உயிரோடு விளையாடும் விபரீத இளைஞர்கள்…. துவாரகா விரைவுச்சாலை ஸ்டண்ட் வைரல் வீடியோ….!

துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…

23 minutes ago