“இரட்டை விரல் காட்டுவது ஏன்?” – எடப்பாடிக்கு உதயநிதி கொடுத்த ‘நச்’ விளக்கம்… இதை யாராவது கவனிச்சீங்களா…?

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ‘இரட்டை விரல்’ சின்னத்தைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகவும் அதேசமயம் காட்டமாகவும் விமர்சித்தார். “ஏற்கனவே 10 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தோல்விகளைப் பரிசளித்துள்ளோம்; தற்போது அவர் காட்டும் இரட்டை விரல், அவருக்குக் கிடைக்கப்போகும் 11-வது தோல்வியையே குறிக்கிறது” என அவர் கிண்டலாகத் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கும் தமிழகத்திற்குமான உரிமைப் போராகவே இந்தத் தேர்தலைத் தான் பார்ப்பதாகக் கூறிய உதயநிதி, டெல்லிக்கு தமிழ்நாடு என்றும் “அவுட் ஆஃப் கன்ட்ரோல்” தான் என்பதை நிரூபிப்போம் என முழங்கினார். அதிமுக என்பது பாஜகவின் மறு உருவம் என்றும், நேரடியாக வர அஞ்சும் பாஜக, அதிமுக என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு தமிழகத்திற்குள் நுழையப் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் நிதித் தேவைகளைப் புறக்கணித்த டெல்லி அணியை இந்தத் தேர்தலில் மக்கள் வீழ்த்த வேண்டும் என்று அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைத் தடுக்க அதிமுக மற்றும் பாஜக சதி செய்ததாகவும், அதை முறியடித்து முதல்வர் நிதியை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடும் என்ற பயத்தில், பெண்கள் காலை 9 மணிக்கே பணத்தை எடுத்துவிட்டதாகக் கூறிய அவர், எளிய மக்களுக்கான பாதுகாப்பு அரணாக திமுக அரசு திகழ்வதாகப் பெருமிதம் கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை அதிமுக அரசு 2019-லேயே நிறுத்திய நிலையில், முதல்வர் 10 லட்சம் மடிக்கணினிகளைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கியதை உதயநிதி சுட்டிக்காட்டினார். “10 தோல்விகளைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியை, இந்தத் தேர்தலில் மொத்தமாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறிய அவர், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். புதுக்கோட்டையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே அவரது இந்தப் பேச்சு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Nanthini

Recent Posts

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

8 seconds ago

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

3 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

5 minutes ago

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

11 minutes ago

இவ்வளவு வெறியா?!… “இதுக்கெல்லாமா அடிச்சுப்பாங்க?!”… நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட அண்டை வீட்டார்… பதைபதைக்கும் சிசிடிவி…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத் பேரா குடியிருப்புப் பகுதியில், வீட்டின் வெளியே கட்டில் போடுவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு…

13 minutes ago

“திருச்சி கிழக்கில் திரிஷாவா? ஜான் ஆரோக்கியசாமியா?”…. அன்பில் மகேஷிற்கு செக் வைக்க தவெக போட்ட பிளான்…..!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் மறைவையோ அல்லது…

16 minutes ago