சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அதிகார மையமான அறிவாலய வட்டாரங்களில் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் தற்போது அனல் பறக்கும் விவாதமாக மாறியிருக்கிறது. கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராய மு.க.ஸ்டாலின் அமைத்த 38 பேர் கொண்ட கள ஆய்வுப் பிரிவின் அறிக்கை, தற்போது கட்சிக்குள் ஒரு பெரிய பூகம்பத்தையே வெடிக்கச் செய்திருக்கிறது. 234 தொகுதிகளிலும் ரகசியமாகத் திரட்டப்பட்ட இந்த விவரங்களைப் படித்த ஸ்டாலின், “இப்போதைக்கு யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை வேண்டாம்; அரவணைத்துச் செல்ல வேண்டும்” என்று மென்மையான உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கசிந்ததும், கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார்.
“யார் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றால், பிறகு எதற்காக இந்த உயர் மட்டக் குழுவை அமைத்தீர்கள்?” என நேரடியாக ஸ்டாலினிடமே தன் அதிருப்தியைக் கொட்டியுள்ளார் உதயநிதி. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டால், அடிமட்டத் தொண்டர்களின் மனநிலை என்னவாகும் என்றும், தொடர்ந்து கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் எப்படி களப்பணிக்கு வருவார்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளால் தலைமைக்கு அவர் நெருக்கடி கொடுத்துள்ளதாக அறிவாலய உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. “இவ்வளவு தாராள மனம் கூடாது அப்பா…” என்று உதயநிதி உக்கிரமாகப் பேசியது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், இந்தத் தேர்தல் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்களை விட, தி.மு.க.வின் தேர்தல் வியூகக் குழு ஒன்றின் மீது தான் முதன்மைக் காரணம் என்று 99 சதவீதத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் தொடங்கி, தொகுதிகளின் கள நிலவரம் வரை அனைத்திலும் இந்த கார்ப்பரேட் வியூகக் குழு தங்களுக்கு சாதகமாக, சுயலாபத்திற்காகப் பொய் அறிக்கைகளைத் தலைமைக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கள நிலவரத்தை முழுமையாக மறைத்து, பண பலம் மற்றும் வேண்டியவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்து கட்சியைப் பாதாளத்தில் தள்ளிய இந்த வியூகக் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் ஒற்றைக் குரலாக எதிரொலிக்கிறது.
அதே சமயம், கள ஆய்வுப் பிரிவின் அறிக்கையின்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளிலும், எதிரணிக்கு ரகசியமாக நிதியுதவி செய்வதிலும் ஈடுபட்டது ஆவணப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. கட்சியைப் பலப்படுத்த இந்த 25 மாவட்டச் செயலாளர்களையும் உடனடியாகப் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்பதில் உதயநிதி பிடிவாதமாக இருக்கும் நிலையில், ஸ்டாலினோ கட்சியின் மூத்த தலைவர்களைப் பகைத்துக் கொள்ள தயங்குகிறார். “அரவணைப்பு அரசியலா” அல்லது “அதிரடி சுத்திகரிப்பா” என்ற இந்த இருமுனைப் போட்டியில், தி.மு.க.வின் அடுத்தகட்ட நகர்வு என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…