தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துள்ள திமுக இந்த முறை ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இருந்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இபிஎஸ் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் கை நம்மை விட்டு எங்கும் போகாது என கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூடுதல் சீட்டு மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களை திமுக சமாதானம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி மற்றும் விஜய் தொலைபேசியில் பேசிய விவகாரத்தால் கூட்டணி மாறவும் வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…