மத்திய கிழக்கில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர், தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நேரடி மோதலில் இதுவரை ஒதுங்கியிருந்த ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தற்போது ஈரானுக்கு எதிராகக் களம் இறங்கத் தயாராகி வருகின்றன. உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதே இந்தப்பதற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில், இது ஒரு முழு அளவிலான உலகப் போராக வெடிக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா தலைமையிலான நட்பு நாடுகளுடன் இணைய அமீரகம் முடிவு செய்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாகத் தீர்மானம் கொண்டு வர அமீரகத் தூதர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜலசந்தியைத் திறக்கத் தேவைப்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்தவும், ஈரான் வைத்துள்ள கடல்சார் கண்ணிவெடிகளை அகற்றவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அபு மூசா போன்ற முக்கியத் தீவுகளைக் கைப்பற்றி ஈரானுக்குப் பதிலடி கொடுக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இது நடந்தால், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாகக் களம் இறங்கும் முதல் வளைகுடா நாடாக அமீரகம் வரலாற்றில் இடம்பெறும்.
இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவும் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், தங்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு எனச் சவுதி எச்சரித்துள்ளது. ஈரானுடனான குறைந்தபட்ச நம்பிக்கையும் சிதைந்துவிட்டதாகக் கூறியுள்ள சவுதி, தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரான் குடிமக்கள் அமீரகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், எமிரேட்ஸ் மற்றும் எட்டிஹாட் போன்ற முன்னணி விமான நிறுவனங்களும் ஈரான் பயணிகளுக்கான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் இந்தத் திடீர் வியூகம் போரின் திசையை மாற்றியுள்ளது. சவுதி மற்றும் அமீரகம் போன்ற வலுவான நாடுகள் ஈரானுக்கு எதிராக நேரடியாகப் போரில் குதித்தால், அது ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளையும் உள்ளே இழுக்க வாய்ப்புள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பதற்றம் தணியாத பட்சத்தில், உலக நாடுகளின் தலையீட்டால் இது 3-வது உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் நிலவுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு என உலகப் பொருளாதாரம் ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை இந்தச் சூழல் உணர்த்துகிறது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…