திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் ஆகியோர், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். போளூர் – சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, இவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன்களை இழந்த பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திவிட்டு மனிதாபிமானமின்றி தப்பி ஓடிய அந்த கார் ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவர் உள்ளிட்ட இருவர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…