ஐயோ கடவுளே… தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி… 2 சிறுமிகள் துடிதுடித்து உயிரிழப்பு… நாசிக்கில் நடந்த நெஞ்சைப் பிளக்கும் சோகம்…!

Spread the love

நாசிக் மானேநகர் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் விஷால் சோனாவனே என்பவரின் மகள்களான திருப்தி (8) மற்றும் ஸ்வஸ்தி (6) ஆகிய இரு சிறுமிகள், சனிக்கிழமை மாலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாகத் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பெற்றோர் இருவரும் அருகில் உள்ள தங்களது மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தனர். தந்தை விஷால் வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு உணவளித்துவிட்டு, சமையலறை கதவைத் திறந்து வைத்து வீட்டை வெளியே பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது குழந்தைகள் காணாததால் தேடியுள்ளார். அப்போது சமையலறை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்திருப்பதை கவனித்து உள்ளே பார்த்தபோது, சிறுமிகள் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அண்டை வீட்டாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் இரவு 10:35 மணியளவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இரவு 11:10 மணியளவில் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திறந்தவெளி தண்ணீர் தொட்டிகள், பால்கனிகள் மற்றும் மொட்டை மாடிகள் சிறு குழந்தைகளுக்கு எவ்வளவு அபாயகரமானவை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Swetha

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago