விஜய் vs ஆதவ் அர்ஜுனா… தவெகவில் உச்சகட்ட மோதல்?…. வெளியான பரபரப்பு அறிவிப்பு….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் நிலவுவதாக சமீபத்திய செய்திகள் மற்றும் சமூக வலைதள விவாதங்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, கட்சியின் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூரில் நடைபெற்ற கட்சியின் பரப்புரையின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய சமூக வலைதளப் பதிவுகள் கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. கட்சியின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது விஜய் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் சிபிஐ விசாரணை விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதால், ஆதவ் அர்ஜுனா மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் SIT விசாரணையையே சமாளிப்போம் என விஜய் எவ்வளவோ கூறியும், ஆதவ் SC சென்று சிபிஐ  விசாரணை கோரினார். இதில், விஜய் நினைத்தது போலவே சிபிஐ  விசாரணை தவெகவுக்கு எதிராக திரும்பி இருப்பதாகவும், இதனால் நேரடியாகவே ஆதவ்வை கடிந்து கொண்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொருபுறம், கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்களிடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் கசிகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற விவகாரங்களில் ஆதவ் அர்ஜுனாவின் வெளிப்படையான கருத்துக்கள், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுடன் முரண்படுவதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவெக பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய உள்மோதல்கள் கட்சியின் செல்வாக்கை பாதிக்குமோ என்ற கவலை தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரங்களில் கட்சித் தலைமை விரைவில் ஒரு தெளிவான முடிவை எடுத்து முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

5 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

15 minutes ago

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

27 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

31 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

32 minutes ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

40 minutes ago