BREAKING: கரூர் துயரம்…. தலா ரூ.20 லட்சம் வழங்கினார் விஜய்… சற்றுமுன் அறிவிப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் புதிய கட்சியை தொடங்கி களமிறங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் விஜய் தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பல கருத்துக்களை பதிவு செய்திருந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்படியான நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு விஜய் தரப்பில் தலா 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 41 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்குவார் என கூறப்பட்ட நிலையில், அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Nanthini

Recent Posts

BREAKING: சவரனுக்கு ரூ.400 குறைந்தது.. நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!!

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…

15 minutes ago

வீடியோ எடுக்கப் போய் விபரீதம்.. கடவுள் போல வந்த கிராம மக்கள்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்ட நெகிழ்ச்சி வீடியோ…!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள இட்மா நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சென்ற இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்'…

17 minutes ago

FLASH: சட்டப்பேரவைக்கு வந்தார் CM விஜய்… தமிழக அரசியலில் புதிய சகாப்தம்..!!

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9:30 மணிக்கு மிக உற்சாகமாகத் தொடங்கியது. மக்கள் தீர்ப்பின்…

27 minutes ago

திமுகவுக்கு டாட்டா? “விஜய்க்கு சப்போர்ட்” கூட்டணியை மாற்றும் விசிக? திருமாவளவன் கொடுக்கப்போகும் அந்த ‘மெகா’ ட்விஸ்ட்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

32 minutes ago

கணவரை விவாகரத்து செய்தும் தீராத வெறி…! புதுக் காதலனுடன் சேர்ந்து பழைய காதலனை அடித்தே கொன்ற பெண்… உலுக்கும் முக்கோண காதல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

35 minutes ago

BREAKING: முதன்முறையாக இன்று சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் விஜய்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று…

39 minutes ago