BREAKING: விஜய் அதிரடி முடிவு…. அதிமுக அதிர்ச்சி…. இபிஎஸ் தலையில் பேரிடி….!

By Nanthini on அக்டோபர் 29, 2025

Spread the love

தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு திமுக ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை நிலைநாட்ட பல திட்டங்களை தீட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமையும் என்று யூகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தமிழக வெற்றி கழகம் கொடி பறந்தது அதற்கு மேலும் வலு சேர்த்தது. இப்படியான நிலையில் 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். திமுக மற்றும் பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.